பகுபதம் பகாபதம்

Dinesh.B.Sc
By -
0


 

பகுபதம் பகாபதம்

Ø சொல் என்பதை மொழி, பதம், கிளவி என்றும் குறிப்பிடலாம்

v  சொற்கள் பகுபதம் பகாபதம் என இருவகைப்படும்.

1.     பகாபதம் என்பது பிரிக்க முடியாத தனிச்சொல் கல், படி, மண், செல்

2.    பகுபதம் என்பது பிரிக்கக்கூடிய கூட்டுச் சொல் நடந்தான், பார்த்தல்,           கண்டேன்

*      தமிழில் ஒரு சொல்லைப் பிரித்தால் பொருள் தருவது பகுபதம் எனப்படும்.

*      அந்தப் பகுபதத்தின் உறுப்புகள் மொத்தம் ஆறு வகைப்படும்.

அவை:


1.     பகுதி

2.    விகுதி

3.    இடைநிலை

4.    சந்தி

5.    சாரியை

6.    விகாரம்


 

1. பகுதி

*      சொல்லின் முதலில் நிற்கும்.

*      இது கட்டளைச் சொல்லாக இருக்கும்.

*      பகுதிக்கு வேறு பெயர் முதனிலை என்பதாகும்.

*      வினைப் பகுபதத்தில் உள்ள பகுதி தொழிலை உணர்த்தும்

*      பிரித்தால் பொருள் தரும்.

*      எடுத்துக்காட்டு: படித்தான் என்பதில் 'படி' என்பது பகுதி.

*      படித்தான் - படி+ த் + த் + ஆன் à படி - பகுதி

*      செய்தான் - செய் + த் + ஆன் à செய் - பகுதி

2. விகுதி

*      சொல்லின் இறுதியில் நிற்கும்.

*      விகுதிக்கு வேறு பெயர் இறுதிநிலை என்பதாகும்.

*      வினைமுற்றுப் பகுபதத்தில் வரும் விகுதி, திணை, பால், எண், இடம் உணர்த்தும்.

படித்தான் -படி+ த் + த் +ஆன் à ஆன் - விகுதி ஆண்பால் உணர்த்திற்று.

படித்தது -படி + த் +த் +அ+து à து- விகுதி ஒன்றன்பால் உணர்த்திற்று.

படித்தன-படி + த் + த் + அன் + அ à அ - விகுதி பலவின்பால் உணர்த்திற்று.

*      இது திணை, பால், எண், இடம் அல்லது வியங்கோள், எச்சம் ஆகியவற்றை உணர்த்தும்.

வ.எண்

வினைமுற்று வகை

விகுதிகள்

எடுத்துக்காட்டுகள்

1

தன்மை ஒருமை

ஏன், என்

அறிந்தேன், அழைத்தனன்

2

தன்மை பன்மை

அம், ஓம்

அறிந்தோம், உணர்ந்தனம்

3

முன்னிலை ஒருமை

இ, ஆய்

கண்டாய், கூறிதி

4

முன்னிலை பன்மை

ஈர், மின், உம்

செய்தீர், உண்மின், ஏகும்

5

படர்க்கை. ஆண்பால்

ஆன், அன்

செய்தான், செய்தனன்

6

படர்க்கை. பெண்பால்

ஆள், அள்

செய்தாள், செய்தனள்

7

படர்க்கை. பலர்பால்

ஆர், அர்

செய்தார், செய்தனர்

8

படர்க்கை. ஒன்றன்பால்

து, று

வந்தது, கூறிற்று

9

படர்க்கை. பலவின்பால்

அ, ஆ

கறந்தன, கறவா (ஆ - எதிர்மறை)

10

வியங்கோள்

க, இய, இயர், இ

வாழ்க, வாழிய, வாழியர், வாழி

11

பெயரெச்சம்

அ, உம்

வந்த, ஓடும்

12

வினையெச்சம்

உ, இ, அ

சென்று, கூறி, காண

 

3. இடைநிலை

*      பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.

*      இது பெரும்பாலும் காலம் (இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்) காட்டும்.

*      எடுத்துக்காட்டு: படித்தான் என்பதில் 'த்' (இறந்தகால இடைநிலை) என்பது இடைநிலை.

4. சந்தி

*      பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.

*      புள்ளி வைத்த மெய்யெழுத்துகளாக (த், ப், க்) இது வரும்.

*      எடுத்துக்காட்டு: படித்தான் (படி + த் + த் + ஆன்) என்பதில் முதலில் வரும் 'த்' சந்தி ஆகும்.

5. சாரியை

*      பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.

*      இதற்குத் தனிப்பொருள் இல்லை, ஆனால் சொல்லை இணைக்க உதவும். (அன், ஆன், இன் போன்றவை).

*      எடுத்துக்காட்டு: வந்தனன் (வா + த்(ந்) + த் + அன் + அன்). இதில் இடையில் வரும் 'அன்' சாரியை.

6. விகாரம்

*      மேலே உள்ள உறுப்புகள் சேரும்போது ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.

*      எழுத்து தோன்றுதல், திரிதல், கெடுதல் ஆகியவை விகாரம்.

*      எடுத்துக்காட்டு: வந்தான் (வா > வ என குறுகியது விகாரம்; த் > ந் என திரிந்தது விகாரம்).

ஓர் எடுத்துக்காட்டு விளக்கம்

சொல் : வந்தனன்

இச்சொல்லைப் பிரிக்கும் முறை : வா (வ) + த் (ந்) + த் + அன் + அன்

உறுப்பு

விளக்கம்

வா

பகுதி ('' எனக் குறுகியது விகாரம்)

த்

சந்தி ('ந்' எனத் திரிந்தது விகாரம்)

த்

இறந்தகால இடைநிலை

அன்

சாரியை

அன்

ஆண்பால் வினைமுற்று விகுதி

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!